தமிழகம்

இறுதிக் கட்டத்தில் கிரானைட் முறைகேடு விசாரணை

செய்திப்பிரிவு

கிரானைட் முறைகேடு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள தால், சட்ட ஆணையர் சகாயத் துக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு கிரானைட் முறைகேடு நடை பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறார். அவரது குழுவின் விசா ரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர் பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மே 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அறிக்கையை தாக்கல் செய்வதற்காக அறிக்கை தயாரிக் கும் பணியை அவர் தீவிரப் படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைக ளுக்கும் நோட் டீஸ் அனுப்பி பெற்ற கோப்புகள் சகாயம் அலுவல கத்தில் மலைபோல் குவிந்துள்ளன. இவற்றை சகாயம் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் சில துறை அதிகாரிகள் அளித்துள்ள பதில் சகாயத்துக்கு திருப்தி அளிக்க வில்லை என்றும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் அறிக்கையில் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே, விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கி, அறிக்கை தயாரிப்பு நடைபெற்று வருவதால் சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. அவரது அலுவல கத்துக்குள் வெளியாட்கள் நுழைய போலீஸார் தடை விதித்துள்ளனர்.

SCROLL FOR NEXT