அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான 11 மற்றும் 12-வது கட்ட தேர்தல்கள் நாளை (ஏப்ரல் 15) முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதிமுகவின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்பு தேர்தல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் 11-வது கட்டமாக ஏப்ரல் 15 முதல் 17-ம் தேதி வரை கடலூர் கிழக்கு; மேற்கு, ஈரோடு மாநகர்; புறநகர், திருப்பூர் மாநகர்; புறநகர், கோவை மாநகர்; புறநகர், கரூர், தஞ்சாவூர் வடக்கு; தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர்; புறநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர்; புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து, 12-வது கட்டமாக ஏப்ரல் 18 முதல் 20-ம் தேதி வரை வடசென்னை வடக்கு; தெற்கு, தென்சென்னை வடக்கு; தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு; மத்தியம்; மேற்கு, திருவள்ளூர் கிழக்கு; மேற்கு, வேலூர் கிழக்கு; மேற்கு, திருவண்ணாமலை வடக்கு; தெற்கு, விழுப்புரம் வடக்கு; தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாநகர்; புறநகர், நாமக்கல், நீலகிரி, திருச்சி மாநகர்; புறநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான மாவட்ட தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.