தமிழகம்

கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆய்வு பணிகள் இன்று தொடக்கம்: 3 பேர் கொண்ட உயர்நிலை குழு வருகை

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னையில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதுகாப்பு தொடர்பாக முதல்கட்ட ஆய்வு பணிகள் இன்று நடக்கவுள்ளது. ஆய்வு பணிகளை மேற்கொள்ள பெங் களூரில் இருந்து மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரி உட்பட 3 பேர் கொண்ட குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை 22 கி.மீ தூரத் துக்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2009-ம் ஆண்டு பணிகள் தொடங்கப் பட்டன.

இதில், இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடி வடைந்துள்ளன. கடந்த ஒரு ஆண் டாக பல்வேறு கட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

இந்நிலையில், கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதுகாப்பு தொடர் பாக முதல்கட்ட ஆய்வு பணிகள் இன்று நடக்கவுள்ளது. ஆய்வு பணிகளை மேற்கொள்ள பெங்க ளூரில் இருந்து மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரி உட்பட 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பல்வேறு சோதனை பணிகளும் நடத்தி முடிக் கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 80 கி.மீ முதல் 90 கி.மீ தூரம்வேகத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளன.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மொத்தம் 10 ரயில்களை இயக்கவுள்ளோம். தேவை அதிக மாக இருக்கும்போது, அதிகபட்ச மாக 2.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். ரயில் பெட்டி கள் பெண்கள், மாற்றுத் திறனாளி களுக்கு என அனைத்து பயணிகளுக் கும் அதிநவீன பாதுகாப்பு மற் றும் வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளன. முதல்கட்டமாக சராசரி யாக 35 கி.மீ வேகத்துக்கு இயக்கப் படும்.

இந்நிலையில், இந்த வழித்தடத் தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கு வதற்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த பெங்களூரில் இருந்து 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். இதில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரக அதிகாரி மற்றும் 2 துணை ஆணையர்களும் இருப் பார்கள். மொத்தம் 2 கட்டமாக இந்த பாதுகாப்பு ஆய்வு பணிகள் நடக்கவுள்ளன.

முதல் கட்டமாக இன்று நடக்க வுள்ள ஆய்வில் ரயில்பெட்டிகள், ரயில்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சின்னல்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. காலை 9 மணி தொடங்கி, மதியம் 2.30 வரை ஆய்வு நடத்தப்படுகிறது. பாதுகாப்பு ஆணையரக குழுவினர் ரயில் களில் பயணம் செய்து, முழுமை யாக ஆய்வு மேற்கொள்வார்கள்.

இது தொடர்பாக அறிக்கை தயார் செய்து ரயில்வே அமைச் சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள், ஓரிரு வாரத்தில் பதில் அறிக்கையை அனுப்புவார்கள். இதையடுத்து, 2-ம் கட்ட ஆய்வு பணிகள் நடத்தப்படும். அப்போது, மெட்ரோ ரயில் பணிமனை உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்துவார்கள். அதன் பின்னர், மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழா தேதி, கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து அரசு அறிவிக் கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT