மலேரியா, மூட்டுவாதம், கல் லீரல் அழற்சி உள்ளிட்ட நோய் களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக்கு டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமத்துவத்துக் கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 108 அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை மத்திய பாஜக அரசு நீக்கியுள்ளது. மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, மருந்து விலை கட்டுப்பாட்டுக்கான தேசிய ஆணையத்திடம் இருந்து பறித்துவிட்டது. தற்போது 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 3.8 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் மலேரியா, மூட்டுவாதம், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை உயரும்.
ஏழை, எளிய மக்களை பாதிக் கும் இந்த விலை உயர்வை ரத்து செய்து அனைத்து மருந்துகளின் விலையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.