தமிழகம்

பல்லாவரத்தில் ரூ.82 கோடியில் மேம்பாலம்: விரைவில் டெண்டர் வெளியீடு

செய்திப்பிரிவு

பல்லாவரம் சந்தை சாலையில் இருந்து குன்றத்தூர் சாலையை இணைக்கும் வகையில் ரூ.82 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க விரைவில் டெண்டர் வெளியிடப்படவுள்ளது. டெண்டர் இறுதிசெய்த 33 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவுள்ளது.

சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாம்பரம் பகுதியிலிருந்து இச்சந்திப்பு வழியாக குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும், விமானநிலைய மார்க்கத்திலிருந்து குன்றத்தூர் சாலைக்கு செல் லும் வாகனங்களாலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இந்த சந்திப்பில், காலை நேரங்களில் ஒரு மணி நேரத்தில் சுமார், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இதனால், மழை காலத்தில் கடுமையான போக்குவரத்து நெரி சல் ஏற்படும். எனவே, இங்கு பல் வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, இங்கு மேம்பாலம் அமைக்க தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவித்தது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடி செலவில் 1038 மீட்டர் தூரத்துக்கு புதியதாக மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிந் துள்ளன. தற்போது, டெண்டர் விடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. டெண்டர் இறுதிசெய்த 33 மாதங்களில் இங்கு மேம்பாலம் அமைக்கப் படும்.

இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்’’ என்றனர்.

நிலம் கையகப் படுத்தும் பணிகள் முடிந்து, டெண்டர் விடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. டெண்டர் இறுதிசெய்த 33 மாதங்களில் மேம்பாலம் அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT