தமிழகம்

வல்லூர் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தர்ணா

செய்திப்பிரிவு

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் சார்பில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு பொறியியல் பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் என 200 பெண்கள் உட்பட 1300 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வரும் இவர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும், பி.எப். மற்றும் மருத்துவ வசதி ஆகியவை தர வேண்டும், பதவி உயர்வு அளிக்கவேண்டும், மின் உற்பத்தியின் போது கரியை கையாளும் தொழிலாளர்களுக்கு தூசி படி மற்றும் சீருடை, பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும், குடியிருப்பு மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்து கின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், வல்லூர் அனல் மின் நிலைய நுழைவு வாயிலில் நேற்று தர்ணா போராட்டம் நடந் தது. காலை 9 மணிமுதல், மதியம் 2 மணி வரை நடந்த இந்த தர்ணா போராட்டத்தில், அமைப்பின் மாநில தலைவர் விஜயன், துணை பொதுச் செய லாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT