தமிழகம்

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவும் விபத்து மீட்புச் சங்கம்

குள.சண்முகசுந்தரம்

"இறந்தவரை உயிர்ப்பிக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால், நாம் மனதுவைத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்" - இதை நிகழ் சரித்திரமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் பரமக்குடியில் உள்ள விபத்து மீட்புச் சங்கத்தினர்.

விபத்து மீட்பு சங்கத்தில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் என பலரும் பொறுப்பாளர்களாக இருக்கிறார் கள். இந்த சங்கம் எப்படி உரு வானது? இவர்கள் எப்படி உயிர் களைக் காப்பாற்றுகிறார்கள்? விளக்குகிறார் சங்கத்தின் தலை வரும் வருவாய் ஆய்வாளருமான ராஜேந்திரன்.

மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. உடனடி சிகிச்சை கிடைக்காததால் விபத் தில் சிக்கிய பலர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற நாம் ஏதாவது செய்ய ணும் என்று எங்களது நண்பர், பத்திரிகையாளர் ஜோதிதாசன் கொடுத்த ஐடியாவில் உதித்தது தான் ‘விபத்து மீட்புச் சங்கம்’.

மருந்துக்கடை உரிமையாளர், வருவாய்த் துறையினர், லேத் பட்டறை முதலாளி என பலதரப் பட்ட நண்பர்கள் சேர்ந்து இந்த சங்கத்தை உருவாக்கினோம். மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்தி பனூருக் கும் சத்திரக்குடிக்கும் இடையே உள்ள 40 கி.மீ. தொலைவுக்குள் அடிக்கடி விபத்துக்கள் நடக்கும். எங்களது சங்கத்தின் செயல்பாடும் இந்த எல்லைக்குள்தான். விபத்து நடந்ததுமே போலீஸ் அல்லது பொதுமக்கள் மூலமாக எங்களுக்கு உடனே தகவல் வந்துவிடும். அது

எந்த நேரமாக இருந்தாலும் முக்கியப் பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் சம்பவ இடத்துக்குப் போய்விடுவோம்.

பொறுப்பாளர்களின் பொறுப்பான பணி விபத்தில் சிக்கியவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். எங்களில் சிலர் அவர்களது பதற்றத்தைத் தணிப்போம். மற்றவர்

கள் அவர்களது உடமைகளைப் பாதுகாப்போம். காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பவர் களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இன்னொரு குழு இருக்கும். இதற்கிடையே, பரமக்குடி ஜி.ஹெச்-சுக்கு தகவல் கொடுத்து மருத்துவர் களையும் தயார் நிலையில் வைத்துவிடுவோம். அங்கே முதலுதவி

எடுத்துக்கொண்டு, தேவைப்பட் டால் அவர்களை மேல் சிகிச்சைக் காக மதுரைக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளையும் பார்ப்போம்.

எஃப்.ஐ.ஆர்., இறப்புச் சான்றிதழ்கூட...

சில நேரம், விபத்தில் சிக்கிய எல்லோருமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து சேரும்வரை கூடவே இருப் போம். சில நேரம், விபத்தில் சிக்கியவர்கள் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிடும்போது, பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அனுப்பி வைப்பதுடன், எஃப்.ஐ.ஆர். போடுவது, இறப்புச் சான்றிதழ் பெறுவது போன்ற நடைமுறைகளையும் நாங்களேமுடித்துக்கொடுத்து அனுப்பு வோம்.

இவ்வாறு ராஜேந்திரன் சொல்ல.. தொடர்ந்து நம்மிடம் பேசினார் சங்க உறுப்பினர் வி.ஏ.ஓ. சுப்பிரமணியன். 108 ஆம்புலன்ஸ் வரும் முன்பு எங்களுக்கு ஆம்புலன்ஸ் செலவு அதிகமாக இருந்தது. அதனால், எங்களுக்குள்ளேயே நிதி திரட்டி மாருதி ஆம்னி வாங்கினோம். 108 வந்தபிறகும்கூட, ஆம்னியையும்பயன்படுத்தி வருகிறோம். 2006-ம்ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 140 விபத்துக்களில் நாங்கள் அவசரப் பணி செய்து பல உயிர்களைக் காப்பாற் றியுள்ளோம். இறந்தவர்களது உடல்களை எங்கள் செலவில் அவங்க சொந்த ஊருக்கு அனுப்பி வைச்சிருக்கோம். இங்கேயே அடக்கம் பண்ணிட லாம்னு சொந்தக்காரங்க சொன்னப்போ, அதுக்கான ஏற்பாடுகளை யும் செஞ்சு கொடுத்துருக்கோம்.

சிலநேரம், உடல் அடக்கத் துக்குக்கூட ஆள் இருக்காது. அந்தமாதிரி சூழ்நிலையில, உறவினர்கள் இருந்தால் என்னென்ன செய்வார்களோ, அத்தனை சடங்குகளையும் நாங்களே செய்து முழு மரியாதையுடன் அடக்கம் செய்வோம். இதற்காகவே ‘உறவுகள்’ என்ற அமைப்பையும் வைத்திருக்கிறோம்.

மத்தவங்களுக்கு- அதுவும் விபத்துல சிக்கிப் போராடுற வங்களுக்கு உதவி செய்யுற பாக்கியம் எல்லோருக்கும் கிடைச் சிடாது. இறைவன் எங்களுக்கு அந்தக் கொடுப்பினையைக் கொடுத்திருக்கான். எங்களால முடிஞ்சவரை இந்தப் பணியைச் செய்துக்கிட்டே இருப்போம்’’ நெகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார் சுப்பிரமணியன்.

SCROLL FOR NEXT