தமிழகம்

பாதுகாப்பு சேவை துறைக்கான இலவச பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழக காவல் துறை ஆகியவை இணைந்து இளைஞர்கள் தனியார் துறை யில் வேலை வாய்ப்பினை பெறும் வகையில், பாதுகாப்பு சேவைகள் குறித்த இலவச 20 நாள் பயிற்சியை அளிக்கின்றன. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த 27-ம் தேதி இந்த பயிற்சியை மாவட்ட எஸ்.பி. சாம்சன் தொடங்கி வைத்தார்.

நாள் தோறும் காலை 9.30 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி யில் உடற்பயிற்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆவணங்களை பயன் படுத்தும் மற்றும் பாதுகாக்கும் முறை, காவல் துறையுடன் தொடர்பு, துப்பாக்கிகள் குறித்த அறிமுகம் உட்பட காவல்துறை யினருக்கு அளிக்கப்படும் பயிற்சி கள் வழங்கப்பட உள்ளன.

250 பேர் வரை இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும். எனினும், தற்போது 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள ஆரோக்கியமான உடல் தகுதி கொண்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்குபெறலாம் என மாவட்ட காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT