தமிழகம்

விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விவசாயப் பொருட்களுக்கு உற் பத்தி விலையுடன் குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவீதத்தை சேர்த்து அளிக்க பரிந்துரை செய்துள்ள விவசாயிகள் குழு அறிக்கையை அமல்படுத்த வேண் டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாய உற்பத்திப் பொருட் களுக்கு, உற்பத்திச் செலவுடன் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை 10 சதவீதத்தை அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள குழு அண்மையில் பரிந்துரை செய்துள் ளது. ஆனால், விவசாயப் பொருட் களுக்கு உற்பத்தி செலவுடன் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை 50 சதவீதம் அளிக்க விவ சாயிகள் குழு பரிந்துரை செய்துள் ளது. இதை ஒப்பிடும்போது, மத் திய அரசு அமைத்த குழுவின் பரிந் துரை மிகவும் குறைவாக உள்ளது.

பசுமைப் புரட்சி இன்றும் நீடித்து நிலைக்கக் காரணம், கோதுமை மற்றும் அரிசி ஆகியவற்றை கொள்முதல் செய்யும்போது நியாயமான ஆதரவு விலை அளித்து வருவதே ஆகும்.

இன்று மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது விவசாயத் துறை யில்தான் உற்பத்திப் பொருட் களுக்கு குறைவான விலை கிடைத்து வருகிறது. எனவே விவசாயம் செய்வது மிகவும் சவாலாக உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு தானியங்களுக்காக போர் மூளும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே, மத்திய அரசு விவசாயி கள் குழு அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT