தமிழகம்

தஞ்சாவூரில் ஏப். 7-ல் மனித சங்கிலிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் நிருபர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று கூறியதாவது:

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அவசர சட்டம் பிறப் பித்திருப்பது கண்டனத்துக்குரியது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவிலும், ராசிமணலிலும் அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித்தாலும், இதற் கான பூர்வாங்கப் பணிகள் தொடங் கப்பட்டிருக்கின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காது. 3 கோடி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இது தொடர் பாக அனைத்து கட்சி எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து தங்களின் கருத்தைத் தெரிவித் திருக்கிறார்கள். இத்திட்டம் நிறை வேற்றப்பட்டால் நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு குந்தகம் விளையும்.

இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 3-ம் கட்ட போராட்டமாக வரும் 7-ம் தேதி தஞ்சாவூரில் மனித சங்கிலி நடத்தப்படவுள்ளது. கட்சி அடையாளமின்றி இந்த போராட்டங்கள் நடத்தப் படுகின்றன.

இவ்வாறு வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT