சமச்சீர் கல்வியை அமல்படுத் தக்கோரி, தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து கைதான திமுகவினர் 35 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
சமச்சீர்க் கல்வியை தமிழகத் தில் அமல்படுத்தக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் திமுக மாணவர் அணி மாநில துணை செயலர் எழிலரசன் தலைமையில் காஞ்சிபுரம் பச்சையப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே, கடந்த 2011-ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதில், 35 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் அரசு தரப்பில் இல்லாததால் 35 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.