கர்நாடகம் அணைக் கட்டுவதை தடுக்காமல் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு வேல்முருகன் பேசினார். ''காவிரியின் குறுக்கே அணை கட்ட முயலும் கர்நாடகத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் அணைக் கட்டுவதை தடுக்காமல் மத்திய அரசு மதக் கலவரத்தை தூண்டுகிறது.
சுங்கச்சாவடியில் அடிப்படை வசதி கோரி வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் பிற மாநிலங்களை எதிர்த்தும் போராட்டம் நடத்தப்படும்'' என்று வேல்முருகன் பேசினார்.