தமிழகம்

சென்னையில் உலக நீர் நாள் நடைபயணம்

செய்திப்பிரிவு

மார்ஃப் இந்தியா நிறுவனம் சார்பில் உலக நீர் நாள் விழிப்புணர்வு நடைபயணம் சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மார்ஃப் நிறுவனத்தின் தயாரிப்பான கெல்வினேட்டர் விற்பனை பிரிவு தலைமைச் செயல் அலுவலர் ஆர்.கண்ணன் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

வாழும் மக்கள் ஒவ்வொரு வருக்கும் முக்கியமானது குடிநீர். இதை அளவோடு பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவது குறையும். இதனால் இயற்கை வளத்தை வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல முடியும். இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக இந்த நடைபயணத்தை நடத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT