மாநில அரசு கேட்டுக்கொண்டால் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டை யில் உதவ தயாராக இருப்பதாக, தென் மண்டல மத்திய பாதுகாப்புப் படை தலைவர் விஷ்ணுவர்தன் ராவ் தெரிவித்துள்ளார்.
கோவை அடுத்துள்ள குருடம் பாளையம் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை பயிற்சி முகாமில் துணை கண் காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், விஷ்ணுவர்தன் ராவ் கலந்து கொண்டார்.
பாதுகாப்புப் படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், 45 துணை கண்காணிப் பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பயிற்சி நிறைவு பெற்ற வீரர்களின் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள், பேரிடர்கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பின்னர், செய்தியாளர்களிடம் விஷ்ணுவர்தன் ராவ் பேசுகையில், தமிழகம் மற்றும் கேரளத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் மற்றும் தேடுதல் வேட்டை குறித்து மாநில அரசு கேட்டுக்கொண்டால் அதற்கு ஏற்றால் போல் மத்திய பாதுகாப்புப் படை உதவும். ஆந்திரம், ஒடிஸா அரசுகள் கேட்டுக் கொண்டதால், அங்குள்ள உள்ளூர் போலீஸாருடன் இணைந்து செயல்பட்டு வருகி றோம்.
மத்தியப் பாதுகாப்புப் படையை பொறுத்தவரை, நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வருகி றோம். குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் அதிநவீன கருவிகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. கருவி களின் தரம் உயர்த்தும்போது அதற்கு ஏற்ப வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஆந்திரம், ஒடிஸா, சத்தீஸ்கர், தெலங்கானா எல்லைகளில் அம்மாநில காவல் துறையுடன் இணைந்து தீவிரவாத தடுப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். இதனால், மாவோ யிஸ்ட் நடமாட்டம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்வது வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லைப் பகுதிகளில் புதிய மாவோயிஸ்ட்களின் நட மாட்டம் இல்லை என்றார்.