சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தொடர்பாக அதன் சென்னை மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவ் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் 12-ம் வகுப்புத் தேர்வை 45,064 பேர் எழுதினர். இதில் 91.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.06 சதவீதம் அதிகம். மாணவர்களின் தேர்ச்சி 91.96 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி வீதம் 94.6 ஆகும்.
தமிழ்நாட்டில் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி 96.20 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி 98.11 வீதம். மறுகூட்டல் மற்றும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு சுதர்சன் ராவ் கூறியுள்ளார்.