வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களை சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஆதார் அட்டை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோ சனை கூட்டம் தலைமைச் செய லர் கே.ஞானதேசிகன் தலைமை யில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநில வருவாய் நிர்வாக ஆணை யர் டி.எஸ்.தர், தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, வருவாய்த்துறை செயலர் ஆர்.வெங்கடேசன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் டி.கே.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.