தமிழகம்

புதிய தலைமுறை அலுவலகம் மீது தாக்குதல்: 4 பேர் கைது

பெட்லி பீட்டர்

சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, கிண்டி போலீசார் சந்தேகத்துக்கிடமான 4 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் இயங்கி வரும் இந்து இளைஞர் சேனாவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் இந்து இளைஞர் சேனா-வைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை சேனல் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவங்களை வைத்து, குண்டுகள் வீசிய சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்தவர்களிடமிருந்து இந்தக் குண்டுவீச்சு தாக்குதலுக்கு அவர்கள் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்து இளைஞர் சேனா செயல்படும் கட்டிடத்திலிருந்து மேலும் சில கையெறி குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT