தமிழகம்

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்: அமைச்சர் ப.மோகன் பேச்சு

செய்திப்பிரிவு

தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்று ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் கூறினார்.

தேசிய பாதுகாப்பு குழும சென்னை மண்டல துணைக் குழுவின் தமிழ்நாடு பிரிவு மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணைந்து நடத்திய “தொழிற்சாலைகளில் தொய்வில்லாத தொடர் உற்பத் திக்கான பாதுகாப்பு கலாச்சாரம்” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

தொடக்க விழாவில், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் வலைத் தளம் மற்றும் பாதுகாப்பு விளம் பரத்தட்டை வெளியிட்டு ஊரகத் தொழில் மற்றும் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது: தொழிலாளர்களின் பாது காப்பைக் கருத்தில் கொண்டு ரூ.1.35 கோடி செலவில் சிவகாசி யில் பிரத்யேக பாதுகாப்பு பயிற்சி மையம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் அரசால் செயல் படுத்தப்பட்டுள்ளன. அனைத்துத் தொழிலாளர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தொழிலாளர் களின் தாய்மொழியிலேயே பாது காப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

நிறுவனர்கள் கம்பெனிகளுக்கு மாதம் ஒருமுறையாவது நேரடி யாகச் சென்று பார்க்க வேண்டும். அவ்வாறு சென்றால் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் சிறப்பாக அமையும். மேலும், விபத்து நடைபெறாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை தொழி லாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் தொடர் பாதுகாப்பு விழிப்புணர்வு செயல் பாடுகளால் தற்போது விபத்துகள் குறைந்திருக்கின்றன. கவனக் குறைவால் ஏற்படும் விபத்துகளுக் கான பாதுகாப்பு நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். என்றார்.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அரசு செயலாளர் மா.வீரசண்முக மணி, சென்னை மண்டல துணைக் குழுத் தலைவர் மு.சி.சம்பந்தம், தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் சி.ஞானசேகர பாபுராவ், வேப்கோ நிர்வாக இயக்குநர் பெ.கனியப்பன், தேசிய பாதுகாப்புக் குழும செயலாளர் த.பாஸ்கரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT