தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் புதிய பதிவாளராக பேராசிரியர் எஸ்.விஜயன் நேற்று பொறுப்பேற்றார். அவர் இதே பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவரான பேராசிரியர் விஜயன் அக்கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிர்வாகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையில் பேராசிரியர் மற்றும் இயக்குநராக பணியில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனித்துள்ளார்.
புதிய பதிவாளர் விஜயனுக்கு துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் 3 ஆண்டுகள் இப்பணியில் இருப்பார்.