தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 304 உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன என்று மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உரிமம் பெற்ற ரத்த வங்கிகளின் பட்டியலை, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாடு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 304 ரத்த வங்கிகளும், மகாராஷ்டிரத்தில் 297-ம், உத்தரப்பிரதேசத்தில் 240-ம் உள்ளன. www.cdsco.nic.in என்ற இணையதளத்தில் மாநிலம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கியின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.செல்வராஜன் கூறும்போது, “இந்தியாவில் உரிமம் பெற்ற ரத்த வங்கிகளை அதிக அளவில் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்தது. தற்போது தமிழகம் முதல் இடத்துக்கு வந்துள்ளது” என்றார்.