திருநெல்வேலியில் வேளாண் மை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கி யுள்ளது.
பாளைங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்தவர் எஸ்.முத்து குமாரசாமி (57). திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 20 ம் தேதி திருநெல்வேலி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் ரயில் முன் பாய்ந்து முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வேளாண்மை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முத்து குமாரசாமிக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும், பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
இதன் எதிரொலியாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்ச ராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் முத்துகுமாரசாமி தற்கொலை தொடர்பான உண் மை விவரங்களை கண்டறிய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸா ருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐ விசாரணை
இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி அன்பு தலைமையில் திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பி பொன்னுதுரை, இன்ஸ் பெக்டர்கள் பிறைசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் நேற்று விசாரணையை தொடங்கினர்.
தனிப்படையினரிடம் வழக் குக்கான ஆவணங்களை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் நேற்று முன்தினம் ஒப்படைத்தார். முத்துகுமாரசாமி தற்கொலை செய்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் ஷாஜ ஹான் என்பவரிடம் முதலில் தனிப்படையினர் விசா ரணை நடத்தினர்.
நேற்று தனிப்படையினர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வேளாண் மை பொறியியல்துறை அலுவல கத்தில் விசாரணை நடத்தினர்.
இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக முதல்வர், தலைமைச் செயலர் உள்ளிட் டோருக்கு அவர் நேற்று அனுப்பி யுள்ள மனு: இவ்வழக்கை மாநில காவல் துறை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர்.
லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நாடெங்கும் பரவி வரும் சூழலில், மேற்கண்ட வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டுமென நாட்டுப்பற்று உள்ளோர் கருதுகின்றனர்.
அரசு பொறுப்புகளில் உள் ளோர் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சந்தேகமும், குற்றச்சாட்டும் எழுந்துள்ள பின்னணியில் எஸ்.முத்துகுமாரசாமியின் தற்கொலை வழக்கை மத்திய புலானாய்வு துறை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.