திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை கூடுகிறது. இதில் 2016 சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
திமுக தலைமைக் கழகத்துக் கான புதிய நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் திமுக செயற்குழு நாளை காலை கூடுகிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதையடுத்து திமுக இளைஞரணி கூட்டம் 8-ம் தேதி நடக்கவுள்ளது.
இதுமட்டுமன்றி, திமுக மகளிரணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் கோவையில் மார்ச் 7, 8 தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் 7-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்களும், 8-ம் தேதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 5 பெண்களுக்கு விருதும் வழங்கப்படவுள்ளது.