தமிழகம்

வேட்பாளர்களின் சொத்துகளை தீவிரமாக கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு

செய்திப்பிரிவு

வேட்பாளர்களின் சொத்துகளை தீவிரமாக கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய வழிமுறைகளை கையாள்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ள நபர்களின் சொத்துக் கணக்கை சரிபார்க்க, வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இம் முறை, மனுத்தாக்கல் செய்வோரின் சொத்துக் கணக்கை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் துறை யும், வருமான வரித்துறையினரும் முடிவு செய் துள்ளனர். இதன்படி, அனைத்து வேட்பாளர்களின் சொத்துக் கணக்கையும் வருமான வரித்துறை யுடன் பகிர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக, தேர்தல் ஆணையத்தினர் அனுப்பும் சொத்துக் கணக்குகளில், தேர்தல் முடிவுகளில் முதலிரண்டு இடங்களைப் பெற்றவர் களின் சொத்துக்களை மட்டும் வருமான வரித் துறை சரிபார்க்கும். ஆனால் இம்முறை அனைத்து நபர்களின், குறிப்பாக தேர்தல் துறை பரிந்துரைத்து அனுப்புவோரின் சொத்துக் கணக்கை சரிபார்க்க திட்டமிடப்பட்டு, அதற்கான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கணக்குக்கு ஏற்ப, வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்திருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. அதில் குளறுபடிகள் இருந்தால் அவர்கள் வருமான வரி வலைக்குள் சிக்குவர்.

SCROLL FOR NEXT