தமிழக கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் அம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை 6 மணி முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.
2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குத லில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்துக்கு ஒரு தடவை 'ஆபரேஷன் அம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 13 கடலோர மாவட்டங்களில் உள்ள தமிழக காவல்துறையினர், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை ஆகிய மூன்று பிரிவினரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங் களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொது மக்கள் அதிகம் கூடும் இடங் களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் ஒத்திகையின் சாராம்சம்.
இன்று காலை 6 மணி முதல் 20-ம் தேதி காலை 6 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். இதில் ஏதாவது ஒரு நேரத்தில் தீவிரவாதிகள் போல வேடமணிந்தவர்கள் கடல் பகுதியில் இருந்து ஊடுருவி நில பகுதிக்கு வருவார்கள். தமிழக கடற்கரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதில் எந்த இடத்தில் இருந்து ஊடுருவுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
இதனால் தமிழக போலீஸார் அனைத்து இடங்களிலும் பாது காப்பு பணியில் உஷாராக இருந்து அவர்களை கண்டு பிடிக்க வேண்டும். அப்படி கண்டு பிடிக்காத போலீஸாரிடம் இருந்து விளக்கமும் கேட்கப்படும். இதற்கு முன்பு பலமுறை நடத்தப்பட்ட ஆபரேஷன் அம்லா ஒத்திகை நிகழ்ச்சியில் ஓரிரு இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் தீவிரவாதிகள் போல வந்த பாதுகாப்பு படை வீரர்களை தமிழக போலீஸார் மடக்கி பிடித்துள் ளனர்.