தமிழகம்

செய்யூர் அருகே அரசு நிலத்தை மீட்கக் கோரி லண்டனிலிருந்து எஸ்பிக்கு இ-மெயிலில் புகார்: ‘தி இந்து’ விடம் தொலைபேசியில் தகவல்

செய்திப்பிரிவு

செய்யூர் அடுத்த விளங்காடு கிராமத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான 100 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கக் கோரி, இங்கி லாந்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிக்கு இ-மெயிலில் புகார் மனு வந்தது. இதுகுறித்து ‘தி இந்து’ நிருபரிடம் இங்கிலாந்திலிருந்து தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

செய்யூர்-விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் பாபு. மென்பொருள் பொறியாளராக இங்கிலாந்தில் பணிபுரி கிறார். விளாங்காடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதை தட்டிக் கேட்டதற்காக தங்களது பூர்வீக சொத் தான 3 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங் கள் தயாரித்து சிலர் ஆக்கிரமித்திருப் பதாகவும் காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமா ருக்கு இ-மெயில் மூலமாக புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி இங்கிலாந்திலிருந்து தொலைப்பேசி மூலம் ‘தி இந்து’வை தொடர்புகொண்டு சரணவன் பாபு கூறியதாவது:

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளிட்ட 100 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் விவ சாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிமிரப்புகள் குறித்து 2010-ல் கிராம மக்கள் சார்பில் செய்யூர் வட்டாட்சியர், மதுராந்தகம் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு முறை கேடாகப் பட்டா பெறும் முயற்சிகளும் நடக்கிறது. இதற்கு, வருவாய்த்துறை, பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த ஆக்கிமிரப்புகளை அகற்றி கிராம மக்கள் பயன்பெறும் வகையில், வனத் துறையிடம் ஒப்படைத்து காடு வளர்ப்பு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என ஊராட்சியில் கடந்த 20-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆக்கிர மிப்புகள் தொடர்பாக இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளேன். எஸ்பி விஜயகுமார் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT