தமிழகம்

மார்ச் 24-ல் மீனவர் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

இந்திய - இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இந்திய - இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நிலவிவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு அரசுகளின் ஏற்பாட்டில் மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 27 -ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், மே 12-ம் தேதி கொழும்பில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றன. 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசும், இலங்கை அரசும் சென்னை பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளன. வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையிலிருந்து 15 மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் மீனவர் சங்க பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT