தமிழகம்

சிமென்ட் மூட்டை ரூ.400 ஆக விலை உயர்வு

செய்திப்பிரிவு

ரூ.280-க்கு விற்கப்பட்ட சிமென்ட் மூட்டை விலை ரூ.400 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் சிமென்ட் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

தென்னிந்தியாவில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 130 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது தற்போது பாதியாக குறைந்துவிட்டது. சிமென்ட் தேவை குறைந்ததே இதற்கு காரணம். அரசு கொள்முதல் செய்யும் சிமென்ட் அளவும் குறைந்துவிட்டது. இதனால், சிமென்ட் ஆலைகளில் ஒரு மாதத்துக்கு 13 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.280-க்கு விற்கப்பட்டது. இது சிறிது சிறிதாக விலையேறி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ரூ.400-ஐ எட்டியது.

ஆலைகள் தமிழக அரசுக்கு சிமென்ட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதால், வெளிச் சந்தை யில் எவ்வளவு விலை அதிகரித்து விற்றாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை சாதக மாக பயன்படுத்திக்கொள்ளும் சிமென்ட் நிறுவனங்கள் இஷ்டத் துக்கு விலையை ஏற்றிவரு கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT