தமிழகம்

பன்னோக்கு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், காசநோய் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சி.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT