பொறியியல் மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘கெம்பிளக்ஸ்’ எனப்படும் தொழில்நுட்பத் திருவிழா எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் 23-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக வேதியியல் பொறியியல் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொழில்நுட்ப கருத்தரங்கம், பயிலரங்கம், குழு விவாதம், சிறப்பு சொற்பொழிவு, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், வினாடி-வினா என பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த தொழில்நுட்பத் திருவிழாவில் நடைபெற உள்ளன.
சென்னை தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மார்ச், 25-ம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. தொழில்நுட்ப திறமைக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் பொறியியல் மாணவர்கள் (அனைத்துப் பாடப் பிரிவுகள்) கலந்துகொள்ளலாம். இதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.chemflux.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேதியியல் பொறியியல் சங்கம் அறிவித்துள்ளது.