தமிழகம்

அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து காப்பீட்டுத் துறை ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்டித்து, பொது காப்பீட்டுத் துறை ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி மண்டல அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT