தமிழகம்

பெண் பட்டய கணக்காளர் பயிலரங்கம்

செய்திப்பிரிவு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பட்டய கணக் காளர்களுக்கான பயிலரங்கு சென்னையில் நேற்று நடந்தது. இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பின் தென் மண்டல மகளிர் குழு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. சுகாதாரத் துறையில் தணிக்கை, கட்டமைப்புத் துறை ஆகிய தலைப்புகளில் இந்த பயிலரங்குகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணசாமி பெண்கள் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.பி.மாலதிஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் பெண்கள் அதிக பங்காற்றி வருகின்றனர் என்று அவர் கூறினார். பட்டய கணக்காளர்கள் அருணா பிரசாத் மற்றும் லட்சுமி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர். பயிலரங்கில் கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைத்து, சுகாதாரத் துறையிலும் கட்டமைப்பு துறையிலும் இருக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.

இந்திய பட்டய கணக்காளர்கள் அமைப்பின் தென் மண்டல மகளிர் குழுவின் சார்பில் எஸ்.சுபாஷினி மற்றும் பட்டய கணக்காளர் லதா வெங்கடேஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT