தமிழகத்தில் நீதிபதி மீதே தாக்குதல் நடத்துவது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதைக் காட்டுகிறது என்று மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' காவிரியில் அணை கட்டும் கர்நாடகத்துக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுகிறது. கர்நாடகத்துக்கு எதிராக தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.
தமிழகத்தில் நீதிபதி மீதே தாக்குதல் நடத்துவது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதைக் காட்டுகிறது'' என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.