தமிழகம்

கனமழை தொடர்கிறது: நீலகிரியில் ஆங்காங்கே மண் சரிவு - மாவட்டத்தில் 626.4 மி.மீ. மழை பதிவு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஆங் காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உதகை, குன்னூர், குந்தா தாலுகாக்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 15-ம் தேதி குன்னூரில் பெய்த மழை யால், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணபுரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், நீலகிரியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குன்னூர், உதகை, கோத்தகிரியில் கனமழை பெய்தது. ஒரே இரவில் 626.4 மி.மீ. பதிவானது. இந்த மழையால் குன்னூர், வெலிங்டன் கன்டோண் மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

காட்டேரி பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்ததில், அப்பகுதியி லுள்ள குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட ஆரோக் கியபுரம், லூர்துபுரம் ஆகிய தாழ்வான பகுதிகளிலும், விளைநிலங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் யாரும் ஆய்வு மேற்கொள்ளாத தால், அப்பகுதி மக்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

மழை அளவு (மி.மீ.):

கோத்தகிரி - 106, குன்னூர் - 104.4, குந்தா - 56, கேத்தி - 82, உதகை - 39, கெத்தை - 53, எமரால்டு - 41, பர்லியாறு 45.

SCROLL FOR NEXT