உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் தாமதிக்கப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உடன்குடி அனல் மின்நிலையத் திட்டத்தை பெல் என்னும் மத்திய அரசு நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து நிறைவேற்றும் வகையில் திமுக ஆட்சியில் 2008-ம் வருடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2012-ம் வருடம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 2013-ம் வருடம் மின்வாரியமே நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டது.
1320 மெகாவாட் மின்சாரம் அளிக்கும் இந்த திட்டம் பலவகையிலும் தாமதம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.