தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் யுகாதி வாழ்த்து

செய்திப்பிரிவு

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு நாளான யுகாதியை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "புத்தாண்டு என்றாலே அனைவரும் புதிய துவக்கத்தை எதிர்நோக்கும் திருநாளாகும். திராவிடத்தின் அங்கமான தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டுத் திருநாளாம் யுகாதி பண்டிகை.

அம்மொழி பேசும் மக்கள் அனைவரும் மிக்க மகிழ்வுடனும், புதிய எழுச்சியுடனும் அத்திருநாளை கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் 21.03.2015- ஆம் தேதி, சனிக்கிழமை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் யுகாதி எனும் புத்தாண்டு துவங்குகிறது.

இந்த புத்தாண்டில் மக்கள் எல்லா நலன்களும், அனைத்து வளங்களும் பெற்று அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், சீரும் சிறப்புமாக வாழ்ந்திட வேண்டுமென எனது இதயமார்ந்த யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT