தமிழகம்

தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

செய்திப்பிரிவு

தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால், குன்னூர் மேட்டுப் பாளையம் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மலை ரயில் பாதையில், கல்லாறு - ஆடர்லி இடையே பாறைகள் விழுந்ததால் தண்ட வாளங்கள், தண்ணீர் குழாய்கள் சேதம் அடைந்தன.

இந்தத் தகவல் அறிந்ததும் நேற்று காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில், கல்லாறு வரை சென்று மீண்டும் திரும்பியது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நேற்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சீரமைப்புப் பணிகள் நேற்று மதியம் நிறைவடைந்து விட்டது. இதனால், இன்று ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT