திண்டுக்கல் அய்யலூர் காக் கையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பி.கந்தன், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் 1997 முதல் ஆசிரிய ராகப் பணிபுரிகிறேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணி குறித்து ஆய்வு செய்து 2010-ல் முனைவர் பட்டம் பெற்றேன். எனது ஆய்வுக் கட்டு ரையை அச்சிட்டு புத்தக மாக வெளியிட அனுமதி கேட்டு தொடக்கப் பள்ளிகள் இணை இயக்குநருக்கு 23.8.2014 அன்று மனு கொடுத் தேன். இதுவரை அனுமதி தரவில்லை. அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச் சந்திரபாபு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கு.சாமித்துரை வாதிட்டார்.
விசாரணைக்கு பின், ஆய்வுக் கட்டுரையைப் புத்தகமாக வெளியிட அனுமதி வழங்கு வது தொடர்பாக தொடக்கப் பள்ளிகள் இணை இயக்குநர், திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் இரண்டு வாரங் களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.