தமிழகம்

சேவை வரி, ரயில் சரக்கு கட்டண உயர்வால் தமிழக மின் வாரிய செலவு அதிகரிக்கும்: திமுக தலைவர் கருணாநிதி கருத்து

செய்திப்பிரிவு

சேவை வரி மற்றும் ரயில் சரக்கு கட்டண உயர்வால் தமிழக மின் வாரியத்துக்கு ரூ.400 கோடி கூடுத லாக செலவாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ் கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு அதிமுக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காதது ஏன்? மத்திய பட்ஜெட் தாக்கலானதும் முதல்வர் பன்னீர்செல்வம் அமைதியாக இருந்த நிலையில், தானாக முன்வந்து ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில் சொல்லவில்லை. இதனால், வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். இது, ‘நீ அடிப்பது மாதிரி அடி, நான் அழுவது மாதிரி அழுகிறேன்’ என்பதாகத்தான் உள்ளது.

நாடாளுமன்றத்தில் போது மான எம்.பி.க்களை கொண்ட அதிமுக, ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் தனது முக்கியத் துவத்தை தாரை வார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேவை வரி மற்றும் ரயில் சரக்கு கட்டண உயர்வு காரணமாக தமி ழக மின் வாரியத்துக்கு ரூ.400 கோடி கூடுதலாக செலவு ஏற்படும்.

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி ரூ.99.70 கோடி நஷ்டம் அடைந் துள்ளது.

போக்குவரத்து ஊழியர் களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு அதிமுக தொழிற்சங்கத்தினரும், குண்டர்களும் மற்ற தொழிற் சங்கத்தினரை தாக்கியது கண்டிக் கத்தக்கதாகும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT