தமிழகம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காக காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணத்தொகையினை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூற அனுமதி கோரியிருப்பதாகவும்,ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று நந்தனம் சிக்னல் பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததால் அனைவரும் கைது செய்யப்பட்டு ஓய்எம்சிஏ மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT