தமிழகம்

ஒற்றுமையும், நட்புணர்வும் வலுப்பெறட்டும்: ஜெயலலிதா யுகாதி வாழ்த்து

செய்திப்பிரிவு

யுகாதி என்னும் புத்தாண்டுத் திருநாளில் என்று ஒற்றுமையும், நட்புணர்வும் மேலும் வலுப்பெறட்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மங்காது பேணிக் காக்கும் அதே வேளையில், அந்தந்தப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிணைந்து அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று, மொழி வேற்றுமை பாராமல் சகோதர சகோதரிகளாய், ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

இந்த ஒற்றுமையும், நட்புணர்வும் இப்புத்தாண்டில் மேலும் வலுப்பெறட்டும் என்றும், மலரும் இப்புத்தாண்டு வளம் செழிக்கும் ஆண்டாகவும், நலம் தழைக்கும் ஆண்டாகவும் மலரட்டும் என்று வாழ்த்தி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய யுகாதி திருநாள் நல் வாழ்த்துகளை உரிதாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT