தமிழகம்

நடைமேடை கட்டணம்: பழைய டிக்கெட்களில் ரூ.10 முத்திரை

செய்திப்பிரிவு

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு வரும் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், பழைய டிக்கெட்டுகளில் ரூ.10 என முத்திரையிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘நாடு முழுவதும் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் வரும் 1-ம் தேதி முதல் உயருகிறது. ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.10 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், பண்டிகை உள்ளிட்ட காலங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடை மேடைக் கட்டணத்தை மேலும் உயர்த்திக்கொள்ள கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ரயில் நிலை யங்களில் பிரிண்டிங் வசதி இருப் பதால், உடனடியாக கட்டணத்தை என மாற்றி புதிய கட்டணத்தை அமல்படுத்த முடியும்.

இந்த வசதியில்லாத மற்றும் ஏற்கெனவே அச்சிடப் பட்டுள்ள பழைய டிக் கெட்டுகளில் ரூ.10 என முத்திரை யிடும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன’’ என்றனர்.

SCROLL FOR NEXT