தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி: உண்மையும், நீதியும் வென்றுள்ளது - அன்புமணி ராமதாஸ் கருத்து

செய்திப்பிரிவு

என் மீதான பொய் வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற்றிருக்கின்றன என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராம தாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை தாக்கியதாக என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி கள் அமர்வு இந்த மேல் முறையீட்டை அறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்துள்ளது.

இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற் றிருக்கின்றன. நான் குற்றமற்றவன் என்பதும், என் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற் றிருக்கின்றன. நான் குற்றமற்றவன் என்பதும், என் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அன்பு மணி ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT