தமிழகம்

முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தர பாமக கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 28-ம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வரும் 28-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சென்னையில் விவசாயி கள் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுப் பதற்காக அனைத்து வழிகளி லும் போராடிவிட்டு, கடைசி ஆயுதமாகவே இந்தப் போராட் டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பாமக உள்ளிட்ட கட்சிகள் போராட் டத்துக்கு முழு ஆதரவு தெரிவித் துள்ளன. இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால் தான் காவிரி பிரச்சினையில் மக்கள் ஒன்றாக கைகோர்த்திருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த முடியும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT