தமிழகம்

தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் குழு: ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய சிறப்​புக் குழு அமைத்து திமுக தலை​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக தலை​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் கடந்த மே 14-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தேர்​தல் தோல்விக்​கான உண்​மை​யான காரணங்​களைக் கண்​டறிய, தலை​மைக் கழகம் சார்​பில் விரி​வான கள ஆய்வு மேற்​கொள்​ளப்​படும் என்று ஸ்டா​லின் தெரி​வித்​தார். இதற்​காக சிறப்​புக் குழு அமைக்​கப்​படும் என்​றும் அறி​வித்​தார். அதன்​படி, சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் குறித்து கள ஆய்வு செய்​வதற்​காக 36 பேர் கொண்ட குழு அமைக்​கப்​படு​கிறது.

குழு​வினர் பிரிக்​கப்​பட்டு பல்​வேறு தொகு​தி​களுக்கு பொறுப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, திரு​வொற்​றியூர், மாதவரம், ஆர்​.கே.நகர், பெரம்​பூர், ராயபுரம், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி உள்​ளிட்ட தொகு​தி​களில் எம்​.எம்​.அப்​துல்​லா, ரேகா பிரியதர்​ஷினி ஆகியோர் ஆய்வு நடத்​துகின்​றனர். எழும்​பூர், கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், சைதாப்​பேட்​டை, அண்ணா நகர், சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி உள்​ளிட்ட தொகு​தி​களுக்கு எஸ்​.கே.பி. கருணா, கே.ஈ.பிர​காஷ் எம்​.பி.ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

உத்​திரமேரூர், காஞ்​சிபுரம், ஆலந்​தூர், செங்​கல்​பட்​டு, தாம்​பரம், பல்​லா​வரம், மயி​லாப்​பூர் உள்​ளிட்ட தொகு​தி​களில் ஹெலன் டேவிட்​சன், கே.இளமகிழன் ஆகியோர் கள ஆய்வு மேற்​கொள்​கின்​றனர். இதே​போல, தமிழகம் முழு​வதும் ஆய்வு மேற்​கொள்​ளும் குழு​வினரின் பெயர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த குழு​வினர் தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து தொகு​தி​களுக்​கும் சென்​று, தேர்​தல் முடிவு​கள், கள நில​வரம் குறித்து விரி​வான ஆய்வை மேற்​கொள்​வார்​கள். மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், தொகு​திப் பார்​வை​யாளர்​கள், தொண்​டர்​களை இக்​குழு​வினர் தனித்​தனியே சந்​தித்​துப் பேசு​வார்​கள். குறிப்​பாக, மாநகர, ஒன்​றிய, நகர, பகு​தி, பேரூர் செய​லா​ளர்​களிடம் கருத்து கேட்​கும்​போது, மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், தொகு​திப்பார்​வை​யாளர்​கள் உடன் இருக்கக் கூடாது.

இவ்​வாறு தொகுதி வாரி​யாக நிர்​வாகி​களிடம் பெறப்​படும் பரிந்​துரைகள், கருத்​துகளின் அடிப்​படை​யில் தொகுக்​கப்​படும் முழு​மை​யான கள ஆய்வு அறிக்​கையை தி​முக தலை​வர் ஸ்டா​லினிடம் இக்​குழு​வினர் ஜூன் 5-ம் தேதிக்​குள் சமர்ப்​பிப்​பார்​கள்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT