தமிழகம்

பொன்னேரியில் காஸ் விபத்து: கணவன், மனைவி பலி

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள திருவாயர்பாடி, லட்சுமியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(56). இவரது மனைவி மல்லிகா(52). நேற்று முன்தினம் அதிகாலை, மல்லிகா தேநீர் தயாரிக்க சமையல் அறைக்கு சென்றார். அப்போது சிலிண்டரில் காஸ் கசிந்திருந்தது. இதனை கவனிக்காமல், அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதனால், சமையல் அறையில் பற்றிய தீ, அவர் மீதும் பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தங்கபாண்டியன் மீதும் தீ பற்றியது. இதில், தீக்காயமடைந்த கணவன், மனைவி இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். பிறகு, கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து, பொன்னேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT