தமிழகம்

பிரசவ கால ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை விநியோகம் திடீர் நிறுத்தம்

ஆர்.செளந்தர்

பிரசவத்துக்குப் பிறகு பெண் களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசு விநியோகித்து வந்த உயிர் காக்கும் ஆடை திடீரென நிறுத் தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரசவத்துக்குப் பிறகு பெண் களுக்கு ஏற்படும் அதிக ரத்தப் போக்கு காரணமாக 30 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயி ரிழப்பு அதிகரித்து வந்தது தெரிய வந்தது.

மத்திய அரசு விநியோகம்

இதையடுத்து, பிரசவத்துக்குப் பிறகு ரத்தப்போக்கால் உயிரி ழப்பு நேரிடுவதைத் தடுக்கும் வகை யில், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங் கள் ஆகியவற்றுக்கு ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடையை மத்திய அரசு விநியோகித்து வந்தது. இதனால், ரத்தப்போக்கால் உயிரிழப்பு நேரிடுவது கட்டுப்படுத்தப்பட்டது.

பிரசவ காலத்தில் ரத்தப்போக் கால் பாதிக்கப்படும் பெண்ணை படுக்கவைத்து, பாதம் தொடங்கி முழங்கால், தொடை, இடுப்பு, வயிறு வரை இந்த உயிர் காக்கும் ஆடையை சுற்றி இறுக்கிக் கட்டுவர். இந்த ஆடையை அணிந்த பிறகு ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

108 ஆம்புலன்ஸுக்குத் தகவல்

கிராமப்புறங்களில் ரத்தப் போக்கால் பாதிக்கப்படும் பெண் கள் அருகேயுள்ள ஆரம்ப சுகா தார நிலையத்துக்கோ, அரசு மருத்துவமனைக்கோ செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரி விக்கின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர் கள் சென்று பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு முதலில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் ஆடையை அணி வித்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அந்த உயிர் காக்கும் ஆடையை ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் கழற்றிக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட பெண்ணை அனுமதிக்கும் இடத் தில் உள்ள வேறொரு உயிர் காக்கும் ஆடையை 108 ஆம்பு லன்ஸ் ஊழியர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். பெண்ணுக்கு அணிவித்த உயிர் காக்கும் ஆடையை மருத்துவமனையில் சுத் தம் செய்து வைத்து, தொடர்ந்து குறிப்பிட்ட காலம்வரை மற்றவர்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் வழங் கப்பட்ட ரத்தப்போக்கை கட்டுப் படுத்தும் உயிர் காக்கும் ஆடைகள் காணாமல் போய்விட்டதாம். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் இருந்து பெற்ற உயிர் காக்கும் ஆடைகளை சில அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் திருப்பித் தரவில்லை யாம். இதனால், தேனி மாவட்டத் தில் உயிர்காக்கும் ஆடை இல்லாம லேயே 108 ஆம்புலன்ஸ் இயக்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், தேனி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலும் மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் ரத்தப்போக்கைக் கட்டுப் படுத்தும் உயிர் காக்கும் ஆடை இல்லை என்று கூறப்படுகிறது.

இறப்பு அதிகரிக்கும் அபாயம்

இந்தச் சூழலில், மத்திய அரசும் கடந்த சில மாதங்களாக மருத்துவ மனைகளுக்கு உயிர் காக்கும் ஆடையை விநியோகிக்கவில்லை யாம். இதனால், ரத்தப்போக்கால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் காஞ்சனாவிடம் கேட்ட போது, ‘சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை இல்லை. கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் இது வரை வழங்கப்படவில்லை. விரை வில் கிடைக்கும் என்று காத்திருக் கிறோம்’ என்றார்

SCROLL FOR NEXT