குருத்தோலை ஞாயிறையொட்டி, நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருக்கள் இல்லத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தியபடி பவனியாக சென்று பேராலய கீழ்க்கோயிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் குருத்தோலையை மந்திரித்து பவனியை தொடக்கி வைத்தார். கீழ்க்கோயிலில் பங்குத்தந்தை சூசைமாணிக்கம் திருப்பலியை நடத்தி வைத்தார். இதில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேராலயத்தில் வரும் ஏப்.2-ல் (புனித வியாழன்) மாலை 5 மணிக்கு திவ்ய நற்கருணை ஆராதனையும், ஏப்.3-ல் (புனித வெள்ளி) மாலை 5 மணிக்கு திருத்தல கலையரங்கில் திருச்சிலுவை வழிபாடும், மன்றாட்டும் நடைபெறும். அதனைத்தொடர்ந்து சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும்.