தமிழகம்

விவசாயிகள் பிரச்சினை: கருணாநிதி தலைமையில் மார்ச் 20-ல் திமுக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தமிழக வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை ஆகியவற்றைக் கண்டித்து சென்னை, வேலூர், திருவாரூர் ஆகிய மூன்று பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலமையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் துரைமுருகன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT