தமிழகம்

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: மாதையன் உட்பட 11 பேருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 2001-ம் ஆண்டு வனப்பகுதிக்குள் கடத்திச் சென்றனர். ராஜ்குமாரை விடுவிக்கும் முயற்சியின்போது, வீரப்பனுக்கு ரூ.15 கோடி கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் வீரப்பனின் அண் ணன் உட்பட 11 பேருக்கு வழங்கப் பட்டதாகவும் கொளத் தூர் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, வீரப்பனின் அண் ணன் மாதையன் உட்பட 11 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாதையன் உட்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கில் மாதையன் உட்பட 11 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்ட னையை நிறுத்திவைத்த உயர்நீதி மன்றம், 11 பேரும் சத்திய மங்கலம் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இந்த நிபந்தனையை தளர்த் தக் கோரி மாதையன் உள் ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.மாலா இவ்வழக்கை விசாரித்து, மாதையன் உள்ளிட்ட 11 பேரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT