தமிழகம்

சூளகிரி அருகே தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் வட்டம் சூளகிரி அருகே 2,300 ஏக்கர் பரப்பளவில் தொழில் உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தொழிற்துறை சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இதற்கான உத்தரவும் வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிப்பள்ளி, அட்டகுறுக்கி, காலட்டி, மருதாண்டப்பள்ளி, செட் டிப்பள்ளி, தோரிப்பள்ளி ஆகிய 6 ஊராட்சிகளில் 834 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி சம்பந்தப் பட்ட விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், புதிய சிப்காட் தொழிற் பேட்டை (பகுதி-3) அமைக்க நிலம் தேவைப்படுகின்றன என தமிழக அரசுக்கு தோன்றுவதால், 1997-ம் ஆண்டு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி நிலம் எடுக்கப்படும். இதற்கு மறுப்பு தெரிவிக்க 30 நாட்கள் அவ காசம் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலம் கொடுக்க விவசாயிகள் மறுத்து வரும் நிலையில், சூளகிரி யில் தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) அலுவலகம் தொடங்கப் பட்டு 3 வட்டாட்சியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதனிடையே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய அமைப்பு களும், தேமுதிக, பாமக, திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும் களம் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்து கேட்புக் கூட்டம் ரத்து

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன் தலைமையில் விவசாயி களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளி யிடப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள் ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பே கூட்டம் தள்ளி வைத்த தற்கு காரணம் எனக் கூறப்படு கிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இப்பணி களை சிப்காட் நிர்வாகம் மேற் கொள்வதாகவும், கோரிக்கை மனுக்களை தொழில்துறை செய லாளர், சிப்காட் மேலாண்மை இயக்குநரிடம் அளிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

236 தொழிற்சாலைகள் மூடல்

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் பொதுச்செயலாளர் சண் முகம் இதுகுறித்து கூறும்போது, ‘கெலவரப்பள்ளி அணை ஆயக் கட்டு பகுதி விவசாய நிலங் களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கதக்கது. ஏற்கெனவே ஓசூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட்களில் 236 தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. அதில் ஏராளமான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், ஓசூர் அருகே பஞ்சேஸ்வரம் கிராமத்தில் இருந்து மத்திகரி வரை ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக அரசு புறம் போக்கு நிலம் உள்ளது. விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT